Friday, August 29, 2025

ஸஹாபிகள் கொண்டாடிய மீலாது விழா*

ஸஹாபிகள் கொண்டாடிய மீலாது விழா*

 *ஸஹாபிகள் கொண்டாடிய மீலாது விழா*


أنَّ رسولَ اللَّهِ صلّى اللَّهُ عليْهِ وسلَّمَ خرجَ على حَلْقةٍ يعني من أصحابِهِ فقالَ ما أجلسَكم قالوا: جلَسنا ندعوا اللَّهَ ونحمَدُهُ، على ما هدانا لدينِهِ ومنَّ علينا بِكَ قالَ آللَّهُ ما أجلسَكم إلّا ذلِكَ قالوا آللَّهُ ما أجلسنا إلّا ذلِكَ قالَ أما إنِّي لَم أستحلِفْكم تُهمةً لَكم وإنَّما أتاني جبريلُ عليْهِ السَّلامُ فأخبرَني أنَّ اللَّهَ عزَّ وجلَّ يُباهي بِكمُ الملائِكةَ


الراوي: معاوية بن أبي سفيان رضي الله عنه • النسائي (٥٤٤١) • صحيح


 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபிகள் கூடியிருந்த ஒரு மஜ்லிஸிற்கு வந்தார்கள்.


எதற்காக இங்கு நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். 


அல்லாஹ் எங்களை அவனுடைய தீனின் மீது நேர்வழியில் செலுத்தியதற்காகவும், உங்களை எங்களுக்கு நிஃமத்தாக வழங்கியதற்காகவும் அல்லாஹ்வை புகழ்ந்தும் பிரார்த்தித்தவர்களாகவும் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.


அல்லாஹ்வின் மீது சத்தியமாக அப்படித்தானா? என்று மீண்டும் கேட்டார்கள். அருமை ஸஹாபிகள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆமாம் நாயகமே! அதற்காகவே நாங்கள் குழுமி இருக்கிறோம் என்று சொன்னார்கள். 


அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபிகளிடம், என் அருமைத் தோழர்களே! உங்களை இழிவு படுத்துவதற்காக நான் சத்தியம் செய்து கேட்கவில்லை. மாறாக, நீங்கள் கூடியிருக்கிற இந்தக் கூட்டத்தை பார்த்து அல்லாஹ் மலக்குகளிடம் பெருமை பட்டுக் கொண்டிருக்கிறான் என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்போது வந்து சொல்லிவிட்டு சென்றார்கள் என்றார்கள். 


அறிவிப்பாளர்: முஆவியா இப்னு அபூ சுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹுமா. 

நூல்; நஸயீ 5441

இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும்.


 மேற்கண்ட இந்த ஹதீஸின் வழியே ஸஹாபிகள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் நமக்கு நிஃமத்தாக வழங்கியதைக் குறித்து கூடிப்பேசி மகிழ்ந்து இருக்கிறார்கள் என்பதையும், அதை கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்து இருக்கிறார்கள் என்பதையும், அதை குறித்து அல்லாஹ் பெருமைப்படுகிறான் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 


அல்லாஹ் பெருமைப்படுகிற வகையில் நாம் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மௌலித் ஷரீப் ஓதி மீலாது விழா கொண்டாடி மகிழ்வோம். 


அன்புடன் 

TSA அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி 

ஆசிரியர் - அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ் 

9841567213


மீள்: Sep 18, 2023.



No comments:

Post a Comment

ஸஹாபிகள் கொண்டாடிய மீலாது விழா*

 *ஸஹாபிகள் கொண்டாடிய மீலாது விழா* أنَّ رسولَ اللَّهِ صلّى اللَّهُ عليْهِ وسلَّمَ خرجَ على حَلْقةٍ يعني من أصحابِهِ فقالَ ما أجلسَكم قالوا: ج...